News January 7, 2025

பிப்.5இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10 முதல் 17 வரை வேட்புமனுத் தாக்கல், ஜனவரி 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என ECI அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.EVKS இளங்கோவன் மறைவால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 16, 2026

நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

image

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

News January 16, 2026

மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

image

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

News January 16, 2026

பொங்கல் பரிசு: தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,260) குறைந்து $4,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் சுமார் $300 அதிகரித்த தங்கம் இன்று சரிவைக் கண்டுள்ளது. தை பிறந்துள்ளதால், சுப முகூர்த்த விழாவுக்காக நகைகள் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்திய சந்தையில் இன்று கணிசமான அளவு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!