News February 8, 2025
ஈரோடு இடைத்தேர்தல்: வாய்ப்பை தவறவிட்ட அதிமுக
இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சி முழு அதிகார- பண பலத்துடன் இறங்குவது வழக்கம் தான். அதற்காக தேர்தலையே அதிமுக புறக்கணித்தது, நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டதாகவே தோன்றுகிறது. வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றாலும், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவும், எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கே பெற்று, திமுக அரசு மீது மக்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் பயன்படுத்தி இருக்கலாம். உங்க கருத்து?
Similar News
News February 8, 2025
இந்த மாத்திரையை அதிகமா யூஸ் பண்றீங்களா!
கை -கால் வலிப்பு, நரம்பு வலி, பதட்டம் போன்ற பிரச்னைகளுக்கு Pregabalin மாத்திரைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த Pregabalin மாத்திரையை பயன்படுத்தி உலகின் பல நாடுகளில், பலர் உயிரிழந்து இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். மேலும், இந்த மாத்திரையை அவ்வப்போது மட்டுமே எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இனி கொஞ்சம் கவனமாக இருங்க!
News February 8, 2025
டெல்லி ஒரு மினி இந்தியா: மோடி
டெல்லி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அரசியலில் பொய்கள் எடுபடாது என்று அவர் ஆம் ஆத்மியை சாடினார். டெல்லி ஒரு மினி இந்தியா என்றும் அதில் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் பாஜகவை அங்கீகரித்திருப்பதாக அவர் பேசினார். இனி டெல்லியில் டபுள் எஞ்சின் ஆட்சி என்றும் அவர் பெருமைப்பட தெரிவித்தார்.
News February 8, 2025
ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம்.! சீக்ரெட் டிப்ஸ்
இதற்கு ஒரு சிம்பிள் & சீக்ரெட் டிப்ஸ் இருக்கு. ஆனால், இதற்கு ஒரே ஒரு கண்டிஷன் உங்கள் போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், போன் Settingsல் Network & Internet ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில், SIM card & Mobile networkஐ தேர்ந்தெடுக்கவும். அதில் கீழே இருக்கும் WiFi calling dongleஐ கிளிக் செய்து, WiFi callingஐ ஆன் செய்து கொள்ளவும். அவ்வளவு தான். SHARE IT.