News August 15, 2024
கோயில்களில் சமத்துவ விருந்து

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இன்று சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சமத்துவ விருந்தும் வழங்கப்பட உள்ளது. கோயில்களில் நடைபெறும் இந்த சமத்துவ விருந்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை என்ன?

‘மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற பெயரில் ஆக.1 முதல் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: *மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். *10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். *மாநகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.
News August 11, 2025
10வது நாள்… வலுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3,000 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது. மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போரட்டம் தொடங்கிய நிலையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
News August 11, 2025
இன்றே கடைசி: AIIMS-ல் 3,500 பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள AIIMS ஹாஸ்பிடல்களில் 3,500 நர்ஸிங் ஆபிஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். B.Sc Nursing அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டவர்கள் <