News April 16, 2025
TTV-க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற இபிஎஸ்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுள்ளார். அதிமுகவின் கருப்பு – வெள்ளை கொடி, ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை தினகரன் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அமமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தற்போது இணைந்துள்ள நிலையில் இபிஎஸ் இந்த வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.
Similar News
News December 1, 2025
டிசம்பர் 1: வரலாற்றில் இன்று

*1900 – இதழாளர் சாமி சிதம்பரனார் பிறந்தநாள். *1947 – கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மறைந்த நாள். *1955 – பாடகர் உதித் நாராயண் பிறந்தநாள். *1988 – உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு. *1990 – அரசியல்வாதி விஜயலட்சுமி பண்டிட் மறைந்த நாள். *1997 – பிஹாரின், லக்ஷ்மண்பூர் பதேவில் ரன்வீர் சேனா அமைப்பு நடத்திய தாக்குதலில் 63 தலித்துகள் கொலை.
News December 1, 2025
இந்தியாவில் HIV-AIDS பாதிப்பு குறைவு

இந்தியாவில் 2010-2014-க்கு உட்பட்ட காலக்கட்டத்தில் HIV-AIDS பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய பாதிப்பு அளவு 48.7% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், உயிரிழப்போர் எண்ணிக்கை 81.4% குறைந்துள்ளதாகவும், தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் பாதிப்பும் 74.3% சரிந்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 2024-25-ல் பரிசோதனை எண்ணிக்கை 6.62 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
சச்சின் டெண்டுல்கர் பொன்மொழிகள்!

*உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *விமர்சனங்களை உங்களின் வெற்றிப் படிகட்டுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை.


