News September 5, 2025

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டார்: செங்கோட்டையன்

image

2009-ல் கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் இபிஎஸ் என செங்கோட்டையன் அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் மனம் திறந்து பேசிய அவர், தென்மாவட்டங்களில் வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற, பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதில் எவ்வித தவறும் இல்லை என்றார்.

Similar News

News September 5, 2025

இனி இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, அண்மையில் TNPSC, TRB உள்ளிட்ட அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம்.

News September 5, 2025

காதல் அம்பு விடும் அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்

image

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பிஸியாக உள்ள அனுபமா, இன்ஸ்டாவில் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில், ஸ்டெயிலிஷான லுக்கில் அவர் பகிர்ந்த போட்டோஸ் இப்போது டிரெண்டாகியுள்ளது. இளைஞர்களை கவர்ந்திழுக்கும் போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. கண்டு ரசியுங்கள்…

News September 5, 2025

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹1000 கொடுக்கும் திட்டம்

image

தமிழ் புதல்வன் திட்டம் மூலம், 6-12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 21-30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், தொலைதூரக் கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. https://umisdashboard.tnega.org/auth/login – ல் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!