News October 18, 2025
விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்தால், பாஜகவை கழற்றிவிட்டு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறார் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 18, 2025
அதிமுகவுக்கு EPS கொடுத்த அல்வா: சேகர்பாபு

EPS கொடுத்த அல்வாவால் தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அல்வா விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், EPS-ன் அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். அல்வாவும் உணவு தான் என்று கூறியுள்ள சேகர்பாபு, தேவைப்படும் இடத்தில் CM ஸ்டாலின் அதையும் பரிமாறுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
News October 18, 2025
ATM கார்டு தொலஞ்சிடுச்சா? உடனே இதை செஞ்சிடுங்க!

➤வங்கியை தொடர்பு கொண்டு ATM கார்டை Block செய்ய சொல்லுங்கள் ➤வங்கியின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனிலேயே கார்டை Block செய்ய முடியும் ➤உங்கள் பணம் திருடு போகாமல் இருக்க, உடனே போலீசில் புகாரளியுங்கள் ➤புதிய கார்டுக்கு வங்கியில் விண்ணப்பியுங்கள் ➤Automatic payments-ஐ OFF செய்து வையுங்கள் ➤உங்களுக்கு தெரியாமல் பணம் திருடப்படுகிறதா என்பதை அறிய Transaction History-ஐ அடிக்கடி கண்காணிக்கவும். SHARE.
News October 18, 2025
PAK-ன் காட்டுமிராண்டித்தனம்: ரஷீத் கான்

PAK தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை ரஷீத் கான் கண்டித்துள்ளார். மக்கள் வசிக்கும் பகுதியை தாக்குவது காட்டுமிராண்டித்தனமான செயல் என கூறிய அவர், கிரிக்கெட்டில் ஜொலிக்க எண்ணிய 3 வீரர்களின் உயிரை பாகிஸ்தான் பறித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், Tri-nation series-ல் இருந்து விலகுவதாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவுக்கு அவர் ஆதரவளித்துள்ளார்.