News September 29, 2025
EPS சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

இன்று, நாளை மற்றும் அக்.4-ம் தேதி தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் EPS மேற்கொள்ளவிருந்த ‘மக்களைக்_காப்போம் தமிழகத்தை_மீட்போம்’ பரப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. அக்.2 தருமபுரியின் பாப்பிரெட்டிபட்டி, அரூரிலும், அக் 3 பாலக்கோடு, பென்னாகரத்திலும், அக்.6 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலும் இபிஎஸ் பரப்புரை செய்வார் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
Similar News
News September 29, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டரின் Prescription-யை வாங்கி பார்க்கும் போது, அதிலிருக்கும் பல Short form வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது. ஆனால், அடுத்தமுறை இவற்றை நினைவில் கொள்ளுங்கள் *Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) *Rx- Prescription (மருந்துக்குறிப்பு) *Tx- Treatment (சிகிச்சை) *Sx- Surgery (அறுவை சிகிச்சை) *Hx- History (மருத்துவ வரலாறு) *Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News September 29, 2025
கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.
News September 29, 2025
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.