News March 18, 2024
திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கும் இபிஎஸ்

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் 24ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடங்கவுள்ளார். திருச்சியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ், 31ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், குமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News April 8, 2025
பாதாளத்துக்கு சென்று மீண்ட ஷேர் மார்கெட்

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வரலாற்று சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று மீட்சியடைந்திருக்கின்றன. டிரம்ப்பின் அதிரடி பொருளாதார அறிவிப்புகளால் நேற்று நிஃப்டி சுமார் 885 புள்ளிகள் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களின் காயத்திற்கு மருந்து போடும் விதமாக, இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து, 22,543 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.
News April 8, 2025
பாஜகவில் இணைந்த முன்னாள் CSK வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காகவும், IPL-ல் CSK உள்பட பல்வேறு அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இந்திய அணியில் 2014-ல் அறிமுகமானார். இந்திய அணிக்காக 73 ODI-களில் விளையாடி, 1,389 ரன்களை எடுத்துள்ளார்.
News April 8, 2025
மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மழை காரணமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்டு இளஞ்சியம், அவரின் பேரன், பேத்தி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு CM பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சம் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார்.