News February 16, 2025
ரூட்டை மாற்றும் இபிஎஸ்.. நலன் விரும்பிகளுடன் ஆலோசனை!

அதிமுகவின் நலன் கருதி விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தனது நலன் விரும்பிகளுடன் EPS ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது செங்கோட்டையன் பேசியது, ஐகோர்ட் தீர்ப்பு, OPS விவகாரம் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாம். சசிகலா, தினகரன் ஆதரவாளர்களை அழைத்துப் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 18, 2025
கோவையில் ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “Google Gemini” பெயரில் வைரலாகும் “Nano Banana AI” ட்ரெண்ட் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி போலியான இணையதளம், செயலிகள் மூலம் புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றினால், வங்கி கணக்கு போன்ற தனிநபர் தகவல்கள் திருடப்படலாம் என, கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் TTV, OPS.. இபிஎஸ் சம்மதம்

அமித்ஷா – EPS சந்திப்பு குறித்து புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! NDA கூட்டணியில் மட்டும் TTV, OPS, சசிகலாவை சேர்க்க EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷா கூறியதை அடுத்து, EPS ஓகே சொல்லி இருக்கிறாராம். இதனால், பாஜக தேசிய தலைமை மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.
News September 18, 2025
முகம் பளிச்சிட இந்த தேநீரை குடிங்க!

ரோஜா இதழ்களை பறித்து, நன்கு உலர்த்தி கொள்ளவும் *உலர்ந்த இந்த ரோஜா இதழ்களை, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும் *3- 5 நிமிடங்கள் வரை இந்த நீரை கொதிக்க வைத்துவிட்டு, இறக்கி வடிகட்டவும் *பிறகு இதில், தேயிலைத் தூளைச் சேர்க்கவும் *இதில் தேன் கலந்தால், சுவையான, ஹெல்தியான ரோஸ் டீ ரெடி. இதனை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.