News March 26, 2025
அமித் ஷாவுடன் 2 மணிநேரமாக இபிஎஸ் பேச்சு!

டெல்லிக்கு இன்று சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரவு 8 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. முதலில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் அமித் ஷாவை சந்தித்த இபிஎஸ், தற்போது தனியாக அவருடன் பேசி வருகிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு 2 மணி நேரமாகவா நீடிக்கும் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
பொங்கல் பரிசு பணம்… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

பொங்கல் பரிசுத் தொகைக்கான தமிழக அரசின் அறிவிப்பு குறித்து தகவல் கசிந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 1 கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசாக தலா ₹3,000 வழங்குவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று (அ) நாளைக்குள் அறிவிக்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 1, 2026
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடி

2024 டிசம்பர் மாதத்தை விட இந்தாண்டு ஜிஎஸ்டி வசூல் 6.1% அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் ₹1.64 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2025 டிசம்பர் மாதம் ₹1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2025-26 நிதியாண்டில் ₹16.5 லட்சம் கோடி வசூலித்து, 8.6% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News January 1, 2026
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. தவெகவினர் எதிர்ப்பு

தவெகவில் பதவி கொடுக்கவில்லை என தூத்துக்குடி அஜிதா விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தற்கொலை முயற்சியும் செய்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திருப்பூர் சென்ற செங்கோட்டையனின் காரை மறித்து தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். வெளியூரில் இருந்து வந்தவருக்கு இளைஞர் அணி பதவி கொடுத்ததாக குற்றம்சாட்டிய அவர்கள், KAS-ன் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.


