News March 27, 2025
அதிமுகவினருக்கு இபிஎஸ் திடீர் அறிவுறுத்தல்!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை CM ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக MLAக்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பேரவையில் அதிமுகவினர் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 17, 2025
திருவள்ளூர்: புறநகர்களை இணைக்கும் வகையில் ரயில் தடம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டத்தை ரூ.3.56 கோடி செலவில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதிகள் பயன்பெறும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 58 கி.மீ., துாரம் உடைய இப்புதிய ரயில் பாதைக்கு, தனியாரிடமிருந்து, 229 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.
News September 17, 2025
அனுமதிக்காக மீண்டும் நீதிமன்றத்தை நாடிய தவெக

விஜய் தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை திருச்சியில் இருந்து கடந்த வாரம் தொடங்கினார். ஆனால் அடுத்தடுத்த பரப்புரை கூட்டங்களை நடத்த தவெகவுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்கும்படி தமிழக DGP-க்கு உத்தரவிட கோரி தவெக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
News September 17, 2025
PM மோடியின் பரிசு பொருள்கள் ஏலம்.. வாங்குவது எப்படி?

PM மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் இன்று முதல் அக்.2-ம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. ஓவியங்கள், கலைப்பொருள்கள், சிற்பங்கள், விளையாட்டு சார்ந்த பொருள்களை நீங்கள் வாங்க விரும்புவோர் <