News April 23, 2025
காஷ்மீர் தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின் பகல்ஹாமில் 28 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் பலியான 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய இபிஎஸ், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar News
News April 23, 2025
பஹல்காமில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 3 பேர் காயம் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவர் மட்டும் ICU-ல் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த முருகானந்தம், அரசு அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
News April 23, 2025
சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம்: டெஸ்லா

இந்திய சந்தையில் நுழைவதற்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக டெஸ்லா CFO வைபவ் தனேஜா தெரிவித்துள்ளார். இந்தியா 100% இறக்குமதி வரி விதிப்பதால், இங்கு கார்களின் விலை 100 மடங்கு அதிகம் எனவும், இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா- USA வர்த்தக ஒப்பந்த தீர்வு, எலான் மஸ்கின் இந்திய வருகைக்கு பின், டெஸ்லா இந்திய சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 23, 2025
தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம்: ராஜ்நாத்

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். இக்கொடுந்தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல்களால் இந்தியாவை மிரட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.