News May 7, 2025
இபிஎஸ் வியூகம்.. செயற்குழுவில் அதிரடி காட்ட திட்டம்!

நாளை(மே 2) நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என கூட்டத்தில் கலந்தாலோசிக்க உள்ளனர். இதில், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்றும், திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவிட உள்ளாராம்.
Similar News
News November 26, 2025
மாவட்ட காசநோய் மையத்தில் வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான காசநோய் சுகாதாரப் பார்வையாளர் -1, காசநோய் ஆய்வக நுட்புனர் -1 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் டூவிலர் லைசன்ஸ் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் ரூ.5-க்கான அஞ்சல் வில்லை ஒட்டி மாவட்ட காசநோய் மையத்திற்கு அனுப்பலாம்.
News November 26, 2025
சென்னை வந்தடைந்த KAS & ஆதரவாளர்கள்

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.
News November 26, 2025
சற்றுநேரத்தில் புயல்: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


