News October 1, 2025
அரசியல் லாபமடைய முயலும் EPS: தங்கம் தென்னரசு

கரூர் துயரில் இருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று EPS முயல்வது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசை போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை EPS புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
Similar News
News October 1, 2025
BREAKING: கரூர் துயரம்.. சற்றுநேரத்தில் கைது

தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த், CTR நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், இருவருக்கும் முன் ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் இருக்கும் அவர்களை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
News October 1, 2025
RECIPE: ஹெல்தியான குதிரைவாலி லட்டு!

➤குதிரைவாலி அரிசியை நெய் சேர்த்து வறுத்து, ஆற வைக்கவும் ➤நன்றாக ஆறியதும், அதை மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும் ➤பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும் ➤கடாயில் நெய், சர்க்கரை ஆகியவற்றை பாகாக காய்ச்சி, மாவில் சேர்க்கவும் ➤ இந்த கலவையை தேவையான அளவிற்கு லட்டாக பிடித்தால், குதிரைவாலி லட்டு ரெடி. SHARE.
News October 1, 2025
அடுத்த 3 மாதங்கள்..ரெடியா இருந்துக்கோங்க மக்களே!

அக்டோபர் டூ டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் வழக்கமாக 33 செமீ மழை பதிவாகும், ஆனால் இம்முறை 36 செமீ வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக். 5ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.