News August 25, 2024
அதிமுகவினருடன் இபிஎஸ் ரகசிய ஆலோசனை

முக்குலத்தோர் சமூக மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ரகசிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முக்குலத்தோர் வாக்குகள் குறைந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்களாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தினருடன் இபிஎஸ் அண்மையில் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 24, 2025
விஜய் ஹசாரே டிராபியில் ஜடேஜா

ரோஹித், கோலி வரிசையில் ஜடேஜாவும் உள்ளூர் போட்டியில் விளையாடவுள்ளார். இதனை, சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் ஜன.6, 8 ஆகிய தேதியில் நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பார். NZ-க்கு எதிரான ODI தொடருக்கு முன்னதாக உள்ளூர் போட்டியில் ஜடேஜா பங்கேற்பது, அவரது ஃபார்மை மேலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News December 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 559 ▶குறள்: இமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். ▶பொருள்: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
News December 24, 2025
இறுதி மூச்சு உள்ளவரை தளபதி வழிதான்: அஜிதா

மா.செ., பதவி வழங்காததால் அதிப்ருதியடைந்த அஜிதா, தவெக ஆபீஸ் முன்பு தர்ணா, விஜய் காரை மறித்தது என பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து, CTR நிர்மல்குமார், ராஜ்குமார் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து, தர்ணாவை கைவிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணிப்பேன் என தெரிவித்தார். தலைமை மீதும் தளபதி (விஜய்) மீதும் முழு நம்பிக்கை உள்ளது என்றும் அஜிதா கூறினார்.


