News September 27, 2025

கரூர் விரையும் EPS

image

அதிமுக பொது செயலாளார் எடப்பாடி பழனிசாமி நாளை கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார். அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேலும், தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News September 28, 2025

விஜய்க்கு வந்துள்ள சோதனை

image

கரூர் துயர நிகழ்வானது, விஜய்யை வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது அவரது தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ள சோதனையாகவும் உள்ளது. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் வெளிப்படையான, உறுதியான பதிலையும், விளக்கத்தையும் அளித்தாக வேண்டும். அதை செய்ய தவறும் நிலையில், அது விஜய் மீது நிரந்தர கறையாக மாறிவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

News September 28, 2025

கரூர் துயரம் மிகுந்த வலியை தருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

image

கரூர் துயரம் வேதனை அளிப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியை தருவதாக அவர், X-ல் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் எனவும் கவர்னர் கூறியுள்ளார்.

News September 28, 2025

சென்னை திரும்பினார் விஜய்

image

கரூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து திருச்சி, சென்னை விமான நிலையங்களில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதை தவிர்த்துவிட்டு அவர் சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் விரையும் நிலையில், விஜய் சென்னை திரும்பியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!