News January 22, 2025
வாக்குகள் சிதறாமல் இருக்க இபிஎஸ் போடும் திட்டம்

வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்றோம். ஆனால், வாக்குகள் சிதறாமல் இருக்க எதிரணியினர் வியூகம் வகுக்கின்றனர். அதிமுகவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்றார். இது, அதிமுகவின் கூட்டணி கதவு திறப்புக்கான க்ரீன் சிக்னல் என பலரும் பேசி வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
கம்பீருடன் ரோஹித்.. கேப்ஷன் ப்ளீஸ்!

இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அவர் கம்பீருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போது, கம்பீர் ஏதோ அட்வைஸ் கொடுக்க, அதை ரோஹித் கைகட்டியபடி தீவிரமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லவும்
News October 17, 2025
சோகத்தில் முடிந்த டாம் குரூஸின் காதல் கதை

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் குரூஸும், நடிகை அனா டி அர்மாஸும் காதல் பறவைகளாக பறந்து வந்தனர். இருவரின் திருமணமும் விண்வெளியில் நடக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி, பலரை பிரமிக்க வைத்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் வரை சென்ற 9 மாத காதலின் முறிவுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
News October 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.