News September 25, 2024

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு

image

தயாநிதி மாறன் தாெடுத்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் முறையாக செலவிடவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். இதில் இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது அக்.16இல் உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Similar News

News August 24, 2025

என்னை மிரட்டிய பவுலர் யார்? ருதுராஜ் கெய்வாட் பதில்

image

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டிரெண்ட் போல்ட் என பதிலளித்துள்ளார்.

News August 24, 2025

உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

image

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

News August 24, 2025

இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

image

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.

error: Content is protected !!