News June 8, 2024

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஒன்றிணைவது சாத்தியமா?

image

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரிடம் பேசி அதிமுகவை ஒருங்கிணைக்க இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்பு குறைவுதான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவில் இணைய ஓபிஎஸ், சசிகலா தயாராக இருப்பதாக கூறும் அரசியல் வட்டாரங்கள், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் இபிஎஸ் தான் எனவும், அவர்களை கட்சியில் இணைக்க இபிஎஸ் சம்மதிக்க மாட்டார் என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

Similar News

News September 24, 2025

தமிழ் சினிமா இயக்குநர் காலமானார்.. நேரில் அஞ்சலி

image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த <<17811560>>இயக்குநர் நாராயண மூர்த்தியின்<<>> உடல் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள அவரது மகன் யோகேஷ்வரன் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாராயண மூர்த்தி உடலுக்கு ‘மனதை திருடிவிட்டாய்’ படக்குழு, ‘நந்தினி’, ‘அன்பே வா’ சீரியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RIP

News September 24, 2025

தமிழக அரசில் 881 வேலைவாய்ப்பு!

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க

News September 24, 2025

மொரீஷியஸிலும் அன்புமணி போட்டியிடுவார்: ராமதாஸ்

image

பை பையாக பொய்யை வைத்துக்கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். தாங்கள் தான் பாமக என கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதாக அன்புமணியை அவர் கடுமையாக சாடினார். பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும் என தெரிவித்த ராமதாஸ், தென்கொரியா, ஜப்பான், மொரீஷியஸிலும் மாம்பழ சின்னத்தில் அவர்கள் போட்டியிடவுள்ளதாக கூறினார்.

error: Content is protected !!