News April 17, 2025
EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!

1) அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது <<16145414>>SDPI<<>>; அதிமுக மெல்ல அழியும் எனவும் காட்டம். 2) தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 3) <<16145613>>டெல்லியில் அடுக்குமாடி<<>> கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி; பலர் மாயமானதால் அச்சம். 4) ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 5) U-18 ஆசிய தடகளம்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்.
News April 19, 2025
நடிகை குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஹேக்!

தனது ‘X’ அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது ஐடியை மீட்க யாரேனும் உதவி செய்யுமாறு ‘Please Help Me’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஏற்கனவே பலமுறை ஹேக் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
News April 19, 2025
சார்தாம் யாத்திரைக்கு ரெடியா நீங்க?

பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்வது தான் சார்தாம் யாத்திரை. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் மூடப்பட்டு கோடை காலத்தில் அட்சய திருதியை நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்படும். இதன் தொடர்ச்சியாக வரும் மே 2ல் கேதார்நாத்தும், மே 4ல் பத்ரிநாத் கோயில் நடையும் திறக்கப்படுகிறது.