News October 14, 2025

BREAKING: திமுக அமைச்சருடன் இபிஎஸ் சந்திப்பு

image

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து இபிஎஸ், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த மாதம் திடீரென மயங்கி விழுந்த துரைமுருகன், கையில் காயம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அரசியல் களத்தில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக பயணம் செய்தாலும், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகனை, EPS சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.

Similar News

News October 14, 2025

2025-ல் வசூல் வேட்டையாடிய படங்கள்!

image

2025 முடிவுக்கு வர இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. இன்னும் பல பெரிய படங்கள் ரீலிசுக்கு காத்திருந்தாலும், இந்திய பாக்ஸ் ஆபிசில் பல படங்கள் வசூல் வேட்டையாடியுள்ளன. கலவையான விமர்சனம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பில் வசூலை வாரிக் குவித்த படங்கள்தான் இந்த ஆண்டு அதிகம். அப்படி இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்டை மேலே உள்ள படத்தை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.

News October 14, 2025

இவர்கள்தான் அதிகமாக மது குடிப்பார்கள்

image

போலியாக சிரிப்பவர்கள், உணர்ச்சிகளை அடக்குபவர்கள் குறித்து ஜார்ஜியா பல்கலை., ஆய்வு நடத்தியது. இதில், வேலை நேரத்தில் போலியாக சிரிப்பவர்களும், உணர்ச்சிகளை அடக்குபவர்களும் வேலை முடிந்ததும் மதுவை அதிகமாக குடிப்பதற்கான வாய்ப்புகள் 30% அதிகமாக இருக்கிறதாம். இந்த போலி சிரிப்பு, உணர்ச்சியை குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதிலிருந்து விரைவாக விடுபட, வேலை முடிந்ததும் மது குடிக்க செல்கின்றனாராம்.

News October 14, 2025

அதிமுக MLA-க்களுடன் EPS முக்கிய ஆலோசனை!

image

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக MLA-க்களுடன் பேரவை வளாகத்தில் EPS ஆலோசனை நடத்தினார். இதில், கரூர் துயர சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அதிமுக சார்பில் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள 3 நாள்களில் எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!