News September 26, 2025
தலைவருக்கான பண்பு EPSயிடம் இல்லை: ஆ.ராசா

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிச்சைக்காரன் என்றும், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவர் எனவும் EPS பேசியது அநாகரிகத்தின் உச்சம் என ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் EPS-க்கு இல்லை என்றும் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை பார்த்துவிட்டு முகத்தை மூடியபடியே வந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் எனப் பேசுவது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 26, 2025
மருந்து தயாரிப்புக்கு 100% வரி: டிரம்ப்

USA-வில் ஒரு நிறுவனம், தங்கள் மருந்து உற்பத்தி ஆலையை கட்டமைக்காத பட்சத்தில், பிராண்டட் (அ) காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மருந்து உற்பத்தி ஆலைக்கான கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால் வரி கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே இந்தியாவுக்கு 50% வரி உள்ள நிலையில், இது நாட்டின் மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியாக அமையும்.
News September 26, 2025
BREAKING: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவில் இருந்து விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, முதல் மாவட்டமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்புகள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News September 26, 2025
செரிமான பிரச்னை நீங்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

✱வசம்பு தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணத்தை போக்க உதவுகிறது ➤வசம்பை நன்கு கழுவி, நசுக்கிக் கொள்ளவும் ➤தேவையான அளவு தண்ணீரை சேர்த்து, 3- 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் ➤தேவைப்பட்டால், கருவேப்பிலையும் சேர்க்கலாம் ➤அதை வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் அல்லது வெல்லம் சேர்த்தால், ஹெல்தியான வசம்பு டீ ரெடி. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.