News March 28, 2024

இபிஎஸ்க்கு டிவியை தவிர வேறு எதுவும் தெரியாது

image

டிவியை பார்த்துதான் இபிஎஸ் எதையும் தெரிந்துகொள்கிறார் என கனிமொழி கூறியுள்ளார். தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பேட்டியளித்த அவர், “திமுகவின் வெற்றி தூத்துக்குடி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பிரகாசமாக உள்ளது. எதிர்த்து யார் போட்டியிட்டாலும் மக்கள் நிச்சயம் திமுகவை வெற்றி பெறச் செய்வார்கள். மழை பாதிப்பு உள்ளிட்ட பல நேரங்களில் மக்களுடன் திமுக இருந்தது. மக்களுக்கு அது நன்றாகவே புரியும்” என்றார்.

Similar News

News January 3, 2026

வங்கதேச வீரரை விடுவித்த KKR

image

BCCI அறிவுறுத்தியதன் அடிப்படையில், வங்கதேச வீரர் <<18750067>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR அணி விடுவித்துள்ளது. மாற்று வீரரை எடுத்துக் கொள்ளவும் அந்த அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஹ்மானை KKR ஏலத்தில் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அவரை விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

News January 3, 2026

ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்றம் நடக்காது: சீமான்

image

TN-ஐ யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் TN-ல் எந்த மாற்றமும் நடக்காது என சவால் விடுத்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என திருமாவளவன் பேசுகிறார்; ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவரே அவர் தான் என்றும் கூறினார். உங்கள் கருத்து?

News January 3, 2026

₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

image

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!