News October 12, 2025
அதிமுகவின் அலங்கார தேவதை EPS: ராஜேந்திர பாலாஜி

பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அதிமுகவின் அலங்கார தேவதையாக EPS உள்ளதாக KT ராஜேந்திர பாலாஜி புகழ்ந்துள்ளார். EPS சூப்பர் ஸ்டாரோ, சுப்ரீம் ஸ்டாரோ அல்ல, ஆனாலும் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். விவசாயியாக பிறந்து, கண்மாய் கரைகளில் விளையாடிய ஒருவர் அதிமுக பொ.செ., ஆக உயர்ந்ததே பலருக்கு பிடிக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
Similar News
News October 12, 2025
ஆம்புலன்ஸ் காத்திருப்பு நேரம் குறைப்பு

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7:57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 நிமிடம், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடம், பிற மாவட்டங்களில் 8 நிமிடத்திற்குள்ளும் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிக விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 108 சேவை பற்றி உங்கள் கருத்து என்ன?
News October 12, 2025
தீபாவளிக்கான ஸ்பெஷல் கோலங்கள் உங்களுக்காக….

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, இனிப்பு மட்டுமல்ல. வாசலில் போடும் அழகான கோலங்களும் தான் ஸ்பெஷல். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அழகாக்கும் கோலங்கள் உங்களுக்காக… ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 12, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

நகை வாங்க திட்டமிட்டோருக்கு, தங்கம் விலை கடந்த வாரம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை ₹4,400 அதிகரித்துள்ளது. அக்.5-ல் (கடந்த ஞாயிற்றுக்கிழமை) 1 சவரன் ₹87,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ₹92,000-க்கு விற்பனையாகி வருகிறது. செய்கூலி, சேதாரத்தை கணக்கிட்டால் 1 சவரனின் விலை ₹1 லட்சத்தை தாண்டும். இனிமே நகை வாங்குறது கஷ்டம்போலயே..!