News September 18, 2025

EPS தான் CM வேட்பாளர்: அண்ணாமலை உறுதி

image

தமிழகத்தில் NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என்று அண்ணாமலை உறுதிப்படுத்தியுள்ளார். அமித்ஷா கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், EPS-ஐ CM ஆக்குவதற்கு ஒற்றை நோக்கத்துடன் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு ரீதியாக விரைவில் TTV, OPS ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் நலனுக்காக சிலவற்றை பேசவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Similar News

News March 3, 2026

காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

image

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

NDA ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சி.. செல்லூர் ராஜூ

image

மதுரையில் PM மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பெரியார் படம் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை; மீடியாதான் அப்படி போட்டு இருக்காங்க என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதேபோல், NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என மோடியின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.

News March 3, 2026

வங்கிக் கணக்கில் ரூ.8,000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

image

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக 1,62,900 மீனவ குடும்பங்களுக்கு ₹8000 வரவு வைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பசுந்தேயிலை கிலோவுக்கு 2 ரூபாய் ஆதார விலை என ₹8.53 கோடி நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!