News September 18, 2025
கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS: CM ஸ்டாலின்

திராவிடம் என்றால் என்ன என்று தனக்கு தெரியாது என சொன்னவர், தற்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதாக EPS-ஐ CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS-ன் தரத்தை மக்கள் அறிவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ரெய்டில் இருந்து தப்பிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
மூலிகை: மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூ!

சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி,
*இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டால், இரும்புச்சத்து கிடைக்கும்.
*இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும்.
*இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 18, 2025
அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
கலர்புல்லாக மாறப்போகும் வேட்பாளர்களின் போட்டோஸ்

பிஹார் சட்டமன்ற தேர்தல் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோஸ் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இனி வரும் எல்லா மாநில தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாம். இதனால் வாக்களிக்கும்போது வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் இருக்காது என ECI தெரிவித்துள்ளது.