News December 20, 2024
திமுக அரசைப் பற்றி பேச EPS-க்கு தகுதி இல்லை: ரகுபதி

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை எதிர்க்கட்சித் தலைவர் EPS மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில், தூத்துக்குடியில் போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற EPS-க்கு, திமுக அரசைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சாடிய அவர், அப்போது குற்றச்செயல்கள் பெருகி மக்கள் தவித்துக் கிடந்ததை EPS மறந்து விட்டாரா எனவும் வினவியுள்ளார்.
Similar News
News July 5, 2025
பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை

பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ – வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் மீதான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
News July 5, 2025
த்ரிஷா, நயன்தாரா மீது பாய்ந்த நடிகை ஸ்ரீரெட்டி

‘Me too’ புகார் கொடுத்தபோது நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாயை மூடிக்கொண்டு இருந்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தற்போது போதைப்பொருள் விவகாரத்திலும் மவுனம் காப்பதாக அவர்களை சீண்டியுள்ளார். சினிமாவுக்கு வரும் புது நடிகைகள் பெரிய ஆட்களுடன் சண்டை போட வேண்டாம் எனவும் பிரச்னைகளை வெளியே சொல்லாமல் பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
News July 5, 2025
CSK-க்கு இந்த 3 வீரர்கள் வேண்டும்: தோனி கோரிக்கை

IPL 2025, 5 முறை கோப்பை வென்ற CSK அணிக்கு பெரும் பின்னடவைக் கொடுத்தது. இதனால் 19-வது சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் (RR), GT-யில் இருந்து ராகுல் தெவாட்டியா & வாஷிங்டன் சுந்தரை வாங்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகத்திற்கு தோனி பரிந்துரைத்துள்ளாராம். காயம் காரணமாக ருதுராஜ் விலக, தோனி கேப்டன்சி வகித்த போதிலும், அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தது.