News July 2, 2024
பள்ளியில் சாதி மோதல் குறித்து இபிஎஸ் கவலை

திருநெல்வேலியில் அரசுப்பள்ளியில் சாதி ரீதியான மோதல் காரணமாக 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். சமூகநீதி என்று மேடையில் மட்டும் முதல்வர் பேசுவதாகவும், வெற்று விளம்பர வார்த்தைகளை கூறுவதை விடுத்து, பள்ளிகளில் சாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 21, 2025
விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும்: RB உதயகுமார்

2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என்று மீண்டும் நேற்று அழுத்தமாக கூறினார் விஜய். இந்நிலையில், இதுகுறித்து பேசிய RB உதயகுமார், திமுகவுக்கு என்றுமே அதிமுக தான் மாற்று என கூறியுள்ளார். விஜய் தற்போது தான் படித்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், முதலில் பரீட்சை எழுதட்டும், பின்னர் அவர் பாஸ் ஆவாரா இல்லையா என்பதை பார்ப்போம் என்றும் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் உங்கள் கணிப்பு என்ன?
News September 21, 2025
நவராத்திரியில் தங்கம் வாங்குவதால்..

எவ்வளவு விலை கூடினாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை வாங்குவதற்கு என சில விசேஷ தினங்கள் உள்ளன. அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தங்கத்தை வாங்குவதோ, முதலீடு செய்வதோ வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம். 10-வது நாளான விஜயதசமியில் வாங்குவது கூடுதல் நன்மை கொடுக்கும் எனப்படுகிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.