News August 17, 2024
பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியில் EPS

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இபிஎஸ், பிரிந்து சென்ற அதிமுகவினரை மீண்டும் இணைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர்த்து, மற்றவர்களை இணைக்க முயற்சி நடைபெறவுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ் அணியில் இருக்கும் சில முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இணைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News November 13, 2025
8,858 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <
News November 13, 2025
₹30 கோடியுடன் IPL ஏலத்தில் களமிறங்கும் CSK

IPL 2026 ஏலம், CSK-வைச் சுற்றியே சுழல்கிறது. இதற்கு, சென்னை அணி, தனது தளபதியான ஜடேஜாவை விடுவித்துவிட்டு, சஞ்சுவை எடுக்க முனைப்பு காட்டுவதே காரணம். இந்நிலையில், ₹30 கோடியுடன் CSK நிர்வாகம் ஏலத்துக்கு செல்லவுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, ரச்சின், கான்வே ஆகியோரை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். பதிரானாவை அணியில் தக்க வைக்கவும் வாய்ப்புள்ளது. CSK யாரை விடுவிக்கலாம்? யாரை தக்க வைக்கலாம்?
News November 13, 2025
ரஜினிகாந்த் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனைக்கு பின் அது புரளி எனத் தெரியவந்தது. அண்மைக் காலமாக TN-ல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.


