News October 21, 2025
வக்கற்ற ஆட்சி நடத்தியவர் EPS: அமைச்சர் சக்கரபாணி

நெல்கொள்முதலை திமுக அரசு சரியாக செய்யவில்லை என<<18051682>> EPS குற்றம்சாட்டிய <<>>நிலையில் அமைச்சர் சக்கரபாணி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறாக அரசின் நெல் கொள்முதல் சாதனையை மறைக்கும் வகையில் EPS அவதூறு பரப்புவதாக அவர் சாடியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை ஒரு பைசா கூட உயர்த்த வக்கற்ற ஆட்சி நடத்தியவர் என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
காய்ச்சலை விரட்ட இந்த கசாயத்தை குடிங்க!

மழைக்காலம் வந்தாலே வயது வித்தியாசமின்றி, பலரையும் காய்ச்சல் வாட்டி வதைக்கிறது. அதிலிருந்து நிவாரணம் பெற, இந்த கசாயத்தை குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டினால் கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதில் தேன் சேர்த்து காலை, மாலை, இரவு என காய்ச்சல் குணமாகும்வரை குடிக்கலாம்.
News October 21, 2025
2026 தேர்தல்.. CM ஸ்டாலின் புதிய திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். சில மாவட்டங்களில் நிலவும் உள்கட்சி பிரச்னைகளை தீர்க்கவும் பொறுப்பு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையில் சிக்கினால் உடனடியாக அவர்களை நீக்கிவிடுவேன் எனவும் வார்னிங் கொடுத்துள்ளாராம்.
News October 21, 2025
தீபாவளிக்கு திமுக வாழ்த்து கூறாதது ஏன்? ஆ.ராசா

கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிக்கு ஏன் கூற மறுக்கிறது என்று அக்கட்சி தொண்டர் ஒருவர் ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பினார். பதிலளித்த அவர், இயேசு, முகமது நபி ஆகியோர் பிறந்ததற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. நரகாசுரன் பிறந்தார், பூமியை பத்மாசூரன் சுருட்டினார் என்ற கதையை நம்ப முடிகிறதா? என்ற அவர், பகுத்தறிவுக்கு ஒவ்வாததால் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதில்லை என்று விளக்கமளித்தார்.