News October 10, 2025
EPS அதிமுகவை உள்வாடகைக்கு விட்டுள்ளார்: உதயநிதி

சமீப காலமாக, EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், EPS-க்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது என மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுகவை EPS வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறிய உதயநிதி, தற்போது அதை அவர் உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்துகொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய முயல்வதாகவும் சாடினார்.
Similar News
News October 10, 2025
மகளிர் விடியல் பயண திட்டம் விரிவாக்கம்

மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் விடியல் பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர், விடியல் பயண பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். சுதந்திர தின உரையில் இதுபற்றி CM ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News October 10, 2025
அதிகம் விற்பனையான 10 கார்கள்

வரி குறைப்பு மற்றும் நவராத்திரி பண்டிகை என செப்டம்பரில் கார் விற்பனை களைகட்டியது. எந்தெந்த கார்கள், எவ்வளவு விற்பனையாகின என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-யில் இடம்பிடித்துள்ள கார்கள் மற்றும் அதன் விற்பனை விவரத்தை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
அடங்காத அழுகுரல்.. 30 பேரை கொன்ற இஸ்ரேல்

டிரம்ப்பின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னர், இதுவரை 30 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக பாலஸ்தீன் தெரிவித்துள்ளது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.