News October 27, 2025
EPS 4 ஆண்டுகளாக காணாமல் போனார்: கனிமொழி

4 ஆண்டுகளாக காணாமல் போன EPS, இன்று CM ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்கிறார் என கனிமொழி சாடியுள்ளார். ஒளிந்து கொண்டிருந்த EPS-ஐ, பாஜக கண்டறிந்து கூட்டணிக்குள் இணைத்துள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கூட்டணியை விரட்ட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News October 27, 2025
வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மொன்தா புயல் சென்னைக்கு கிழக்கு பகுதியில் 560 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
BREAKING: தங்கம் விலை ₹400 குறைந்தது

தங்கம் விலை இன்று(அக்.27) சவரனுக்கு ₹400 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹50 குறைந்து ₹11,450-க்கும், சவரன் ₹91,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. <<18114487>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், நம்மூரிலும் தங்கம் விலை மீண்டும் மாற்றம் கண்டுள்ளது.
News October 27, 2025
பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார்: சீமான்

கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்துள்ள விஜய், தேர்தலின்போதும் வாக்குப்பெட்டியை பனையூரில் வைத்து, அங்கு வந்து வாக்களிக்க சொல்வாரா என சீமான் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் (விஜய்) வீட்டில் தான், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என்றும், இது நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.


