News February 17, 2025
செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்

அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் பொறுப்பாளர்களை நியமித்து இறுதிப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ஆனால், இந்தப் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறாததால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இபிஎஸ்க்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சை ஓய்ந்து இருவரும் சமாதானமானதாக சொல்லப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 24, 2025
சாக்பீஸை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
வீர வசனம் பேசிவிட்டு, விவசாயிகளுக்கு துரோகம்: EPS

நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனப்போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக EPS தெரிவித்துள்ளார். அறுவடைக்கு பின்னர் உடனே நெல்லை கொள்முதல் செய்திருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது எனக்கூறிய அவர், கொள்முதல் செய்வதிலும் தாமதம், நெல்லை குடோனுக்கு அனுப்புவதிலும் தாமதம் என்று விமர்சித்துள்ளார். டெல்டாக்காரன் என வீரவசனம் பேசிய CM, விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


