News March 18, 2024
தொகுதி பங்கீட்டு குழுவுடன் இபிஎஸ் ஆலோசனை

தேமுதிக, பாமக உடனான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நடக்கும் இந்த ஆலோசனையில், தேமுதிக, பாமக கேட்கும் தொகுதிகளை கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. எப்படியாவது அக்கட்சிளுடனான கூட்டணியை தக்க வைத்தே ஆக வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் கூறுப்படுகிறது.
Similar News
News October 17, 2025
BREAKING: அதிரடியாக கைது செய்தது சிபிஐ

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வது நபராக ரவிச்சந்திரனை கைது செய்த CBI அதிகாரிகள் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், முன்னதாக கைது செய்யப்பட்ட போலீசாருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்திருந்தார்.
News October 17, 2025
கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்?

ஆத்து தண்ணி சுவையா இருக்கு, ஆனா இதிலிருந்து கடலுக்கு போற தண்ணி ஏன் உப்பா இருக்குன்னு தெரியுமா? நிலத்தில் விழும் மழைநீர் பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை அடித்துச்சென்று ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகள் உப்பு நிறைந்த நீரை கடலில் கொண்டு சேர்க்கின்றன. கடலில் உள்ள இந்த நீர் கடும் வெயிலால் ஆவியாகிறது. எனவே உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் கடல்நீர் எப்போதும் உப்பாகவே இருக்கிறது. SHARE.
News October 17, 2025
ஆணவ கொலைகளை தடுக்க ஆணையம்: VCK வரவேற்பு

ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதை வரவேற்பதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின்படி சட்டம் இயற்றப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்று பாராட்டுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.