News January 9, 2025

இஸ்ரோ புதிய தலைவருக்கு இபிஎஸ் வாழ்த்து

image

இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விண்வெளித்துறையின் முக்கிய பொறுப்பில் நாராயணன் நியமிக்கப்பட்டது, தமிழகத்திற்கு பெருமை எனக் கூறியுள்ளார். மேலும், நாராயணன் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாடு பல உச்சங்களை தொட வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 15, 2026

திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

image

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

News January 15, 2026

BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

image

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

error: Content is protected !!