News August 6, 2024

பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

image

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்கே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2026

PM KISAN பணம் வராதவர்கள் உடனே இதை பண்ணுங்க!

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகையை மார்ச் 13-ல் மத்திய அரசு விடுவித்தது. KYC அப்டேட் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் நிதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் pmkisan-ict@gov.in என்ற மெயிலில் புகாரளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. புகாரை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு 155261 (அ) 1800 1801 551 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News March 15, 2026

RCB பவுலருக்கு ரகசிய திருமணம்!

image

கடந்த பிப்.4-ம் தேதி RCB பவுலர் யஷ் தயாள் ஸ்வேதா என்பவரை கரம்பிடித்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. மீடியா வெளிச்சம் படாமல் நெருங்கிய நண்பர்கள் & உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கில் <<17190660>>அவரை <<>> கைது செய்ய ராஜஸ்தான் ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2026

CINEMA 360: அரசன் படத்தில் அஸ்வத் மாரிமுத்து!

image

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கேமியோ ரோலில் நடிக்கிறாராம். இந்த கேரக்டரில் முன்னர் நெல்சன் நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது *சூர்யாவின் ‘கருப்பு’ மே 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது *கார்த்திக் சுப்பராஜ் & ராணா இணைந்து தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 12:12 மணிக்கு வெளியாகவுள்ளது *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

error: Content is protected !!