News August 2, 2024
சேலம் நிர்வாகிகளிடம் இபிஎஸ் ஆதங்கம்

சேலம் தொகுதியில் அதிமுக தோற்கும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை இபிஎஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய அவர், கட்சிக்கு எதிராக சிலர் வேலை செய்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். யார் என்று சொன்னால் வருத்தப்படுவீர்கள் என்று தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலில் குறைகளை களைந்து வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
Similar News
News December 12, 2025
இந்த ஜூஸ் குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

அவகாடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இதை ஜூஸாக அருந்துவது, பின்வரும் நன்மைகளை தரும் என நியூட்ரிஷனிஸ்ட் பரிந்துரைக்கின்றனர்: *இதயத்திற்கு நல்லது *எடை குறைப்புக்கு உதவும் *செரிமானத்தை சீராக்கும் *சருமம், முடி ஆரோக்கியத்துக்கு உதவும் *கண் ஆரோக்கியம் காக்கும் *எலும்பை வலிமையாக்கும் *மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.
News December 12, 2025
டிரம்ப்பின் ‘Core 5’ நாடுகள் குழுவில் இந்தியாவுமா?

பாரம்பரியமான G7 கூட்டமைப்பை ஓரங்கட்டி, இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பானை உள்ளடக்கிய ‘Core 5’ (C5) என்ற புதிய வல்லரசு குழுவை உருவாக்க, டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. USA-வின் எதிரி நாடுகளாக ரஷ்யா, சீனா கருதப்பட்டு வந்தாலும், சமீபமாக இந்த நாடுகளை சமாதானப் போக்கிலேயே USA கையாண்டு வருகிறது. இதனிடையே, இந்த நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
News December 12, 2025
தமிழ் நடிகை தற்கொலை.. குவியும் இரங்கல்

பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சதீஷுடன் ஏற்பட்ட சண்டையால் சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மன அழுத்தத்தில் இருந்த ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமாக BP மாத்திரை சாப்பிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


