News April 2, 2024
முதல்வர் பாணியில் வாக்கு சேகரித்த இபிஎஸ்

முதல்வர் பாணியில் மார்க்கெட், தேநீர் கடைகளில் இபிஎஸ் வாக்கு சேகரித்தார். கடந்த ஒரு வாரமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இபிஸ் இருவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் பொதுக்கூட்டம், நடைபயணம், டீக்கடை என வாக்கு சேகரித்த நிலையில், இபிஎஸ் வாகனம் மற்றும் பொதுக்கூட்டங்களில் மட்டுமே ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், இன்று அவர் திருப்பத்தூர் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
Similar News
News February 1, 2026
பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் குறைந்து 80,663 புள்ளிகளிலும், நிஃப்டி 638 புள்ளிகள் குறைந்து 24,780 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பதற்குமான வரி உயர்வால் முதலீட்டாளர்கள் பீதியடைந்துள்ளனர். பங்குகளை வாங்கி விற்பதற்கான வரி 0.02%-லிருந்து 0.05% அதிகரிக்கப்படும் என FM நிர்மலா தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
Budget: வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசின் முயற்சி

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் (PROI) இந்திய நிறுவனங்களின் பங்குகளில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம் மூலம் நேரடியாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச அளவு 5% இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம், நிறுவனங்களுக்கு புதிய மூலதனம் கிடைக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
News February 1, 2026
இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்

மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மண்டலங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டில் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத பயிற்சி மையம் நிறுவப்படும் எனவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


