News September 8, 2025
காசு கொடுத்தாலும் EPS வெற்றி பெற முடியாது: கருணாஸ்

தன்னுடைய சுயநலத்திற்காக அதிமுகவை படுகுழியில் தள்ளும் வேலையில் EPS ஈடுபட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். 2026-ல் ஓட்டுக்கு ₹2000 கொடுத்தாலும் EPS வெற்றி பெறுவது கடினம் என்றும் ஜெயலலிதாவின் கனவை அவர்(EPS) அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து நீக்கியதால், கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 9, 2025
சினிமாவின் உச்ச நட்சத்திரம் உதயநிதி: மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், DCM உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, ‘திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக உள்ள நீங்கள் (உதயநிதி), விழா மேடையில் இருந்து இறங்கும்போது முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்’ என 2018-ல் தான் கூறியதாகவும், அவர் அதை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News September 9, 2025
செங்கோட்டையன் வாழ்வில் செய்த முக்கிய தவறு!

அதிமுகவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்தும் செங்கோட்டையன் பக்கம் நிற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு அவரது கடந்த கால செயல்பாடுகளே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தலைமையிடம் விசுவாசமாக இருந்தாலும், நிர்வாகிகளிடம் அதனை அவர் காட்டவில்லையாம். அதோடு, 2017-ல் CM நாற்காலி அவரை தேடி வந்ததை தவற விட்டது பெரும் தவறு என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 9, 2025
மூலிகை: முள்ளுக்கீரையும்.. முக்கிய மருத்துவ பண்புகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*முள்ளுக்கீரையின் வேரோடு ஓமம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால், வயிற்று வலி குணமாகும்.
*இக்கீரையை வேருடன் இடித்து சாறு எடுத்து தேள்கடி, பாம்பு உள்ளிட்ட விஷங்களுக்கு கொடுத்தால் விரைவில் குணமாகும்.
*நீர் அடைப்பு, கட்டி முதலிய நோய்களுக்கு முள்ளுக்கீரை சிறந்த நிவாரணம்.
*பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. SHARE IT.