News August 30, 2025
அண்ணாமலையை அருகே அழைத்த இபிஎஸ்..

ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து, எடப்பாடி பழினிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா மேடையில், எதிரும் புதிருமாக இருந்துவந்த அண்ணாமலையும், EPS-ம் அருகருகே அமர்ந்திருந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
Similar News
News August 30, 2025
டிரெண்டிங்: TRUMP IS DEAD

டிரம்ப் இறந்துவிட்டதாக X-ல் டிரெண்டாகி வருகிறது. இதுவரை 1.60 லட்சம் பேர் ‘#TRUMP IS DEAD’ என பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் டிரம்ப்பின் உடல்நிலை மோசமாகி விட்டதாக தகவல் பரவியது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் தலைமையேற்க தயாராக இருப்பதாக USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இப்படி டிரெண்டாகி வருகிறது. ஆனால், டிரம்ப் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியிருந்தது.
News August 30, 2025
‘மனித GPS’ பாகு கானை போட்டுத் தள்ளிய ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஊடுருவ முயன்ற பாகு கான் பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டான். ‘மனித GPS’ என அழைக்கப்படும் இவனுக்கு எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக இந்தியாவில் நுழைவதற்கு பல ரகசிய வழிகள் தெரியும். 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ இவன் முக்கிய காரணமாக இருந்துள்ளான். இதனாலேயே தீவிரவாதிகளின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளான்.
News August 30, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் முக்கிய அறிவிப்பு

கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு அதிரடியாக இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். மா.செ. கூட்டத்தில் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை நம்மை பற்றி பேசுவதில்லை, நீங்களும் எதுவும் பேச வேண்டாம் என்றும் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். அவரது கருத்தை எப்படி பார்க்குறீங்க?