News February 25, 2025
அதிமுகவை அழிக்க இபிஎஸ் மட்டுமே போதும்: புகழேந்தி

அதிமுகவை இபிஎஸ் விரைவில் அழித்து விடுவார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் கூட சேர்ந்துவிடும், ஆனால் ஒருபோதும் இபிஎஸ் திருந்த மாட்டார் எனவும் விமர்சித்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்யை விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
இந்தியை திணிக்க பாஜக முயலவில்லை: டிடிவி தினகரன்

பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழி போட்டு வருவதாக டி.டி.வி. தினகரன் குறை கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம் என்றார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளதாகவும், அவர்களை மடைமாற்றவே மீண்டும் மொழிப்போர் என திமுக பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
News February 25, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.