News April 15, 2025

ரெய்டுக்கு பயந்தே பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி: முத்தரசன்

image

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதாக CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுகவினர், திடீரென அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக விரைவாக முடிக்குமாறு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

News November 25, 2025

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 548 ரன்கள் டார்கெட்!

image

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 2-வது இன்னிங்ஸில் 260/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு 548 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டமே எஞ்சி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?

News November 25, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ₹30,000 கோடியை செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா ₹26,000 பெற்றுள்ளனர். புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் <<18375564>>தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள்<<>> முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட அனைவருக்கும் டிச.15 முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!