News December 28, 2025
EPS-ன் செயலில் நம்பகத்தன்மை இல்லை: முத்தரசன்

எதிரணி வலுவிழந்திருப்பதால் திமுக கூட்டணி வலுவாக இல்லை, திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் எதிரணி வலுவிழந்திருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுக எப்படி செயல்பட வேண்டும் என அமித்ஷா முடிவெடுப்பதாக கூறிய அவர், உள்கட்சி பிரச்னைகளால் அவர்களின் நாள்கள் வீணாக கழிந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக பொ.செ.,வாக EPS-ன் சொல், செயலில் நம்பகத்தன்மையே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
2025-ல் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரும் ஹிட் அடித்தன. அதில், சில படங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வசூலையும் வாரி குவித்தன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், உங்களுக்கு தெரிந்த படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 30, 2025
வாழ்க்கையை மேம்படுத்தும் பழக்கங்கள்

வாழ்க்கையை மேம்படுத்துவது ஒரே நாளில் நடந்துவிடாது. தினசரி ஏற்படும் சிறிய, நிலையான மாற்றங்களின் பலனாக வாழ்க்கை மேம்படுகிறது. தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும் பழக்கம், வழக்கமாக மாறும்போது வாழ்க்கையின் அற்புதம் நிகழும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?

தவெக கூட்டணியில் காங்., இடம்பெறுமா என்ற கேள்வி அண்மையில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுகவுடனான 22 ஆண்டு கால கூட்டணியை முறிக்க காங்., தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காங்.,-க்கு 50 தொகுதிகளை ஒதுக்க தவெக தயார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 41 சீட்கள் பெற வேண்டும் என காங்., உறுதியாக உள்ளது. இதற்கு திமுக உடன்படாவிட்டால் மாற்றம் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


