News December 23, 2025
EPS-க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.. கசிந்தது தகவல்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததே அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், EPS தலையில் இடியை இறக்குவது போல் மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் ஒருவர், டெல்டாவில் ஒருவர், சென்னையில் ஒருவர் என அதிமுகவின் 3 முக்கிய தலைகள் தவெகவில் இணையப்போவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருமே KAS-க்கு இணையான செல்வாக்கை கொண்டவர்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. யாரா இருக்கும்?
Similar News
News December 25, 2025
சற்றுமுன்: இரவில் விஜய்க்கு பேரதிர்ச்சி

திருவள்ளூர் தவெக நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில், தவெக பூண்டி ஒன்றிய செயலாளரின் போட்டோ இடம்பெறாததால், சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. முன்னதாக, <<18669220>>அஜிதா ஆக்னஸ்<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கபட்ட நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகளின் சோக நிகழ்வுகளால் விஜய் அதிர்ச்சியடைந்துள்ளார்.
News December 25, 2025
WPL: நாளை மாலை 6 மணிக்கு டிக்கெட்

WPL 2026 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மாலை 6 மணி முதல் கிடைக்கும். லீக் போட்டிகள், ஜனவரி 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் RCB மற்றும் MI அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் போட்டிகள், நவி மும்பை மற்றும் வதோதரா மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 5 அணிகள், 22 போட்டிகள். இறுதிப் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். இணையதளம்: https://www.wplt20.com/
News December 25, 2025
2026-ல் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

2026 தொடக்கத்தில் உள்ள கிரஹ நிலைகள், குரு, ராகு கேது பெயர்ச்சிகளின் அடிப்படையில் ராசி பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேஷம், கடகம், கன்னி, தனுசு, கும்ப ராசியினருக்கு பதவி உயர்வு, பொறுப்புகள் கைகூடி வரும். மிதுன ராசியினர் வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்க வேண்டாம். சிம்ம ராசியினர் திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது நடக்கும். அலட்சியம் தவிர்த்து அக்கறையுடன் செயல்படுவது அனைவருக்கும் அவசியம்.


