News November 22, 2025
EPS-க்கு அருகதை இல்லை: ரகுபதி

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து EPS விமர்சித்திருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். பொறுப்பு டிஜிபி என்ற முறையை கொண்டு வந்ததே ADMK தான் என கூறியுள்ள அவர், BJP-க்காகவே திமுகவை EPS குறைசொல்வதாக குறிப்பிட்டார். டிஜிபி மூலம் TN-ல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 30, 2026
கூட்டணியை உறுதி செய்யும் EPS

விரைவில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை உறுதி செய்வதாகவே EPS பேச்சு பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸை நம்பாதீங்க என விஜய்யை சமீபத்தில் விஜய பிரபாகரன் எச்சரித்திருந்தார். அதாவது காங்., இருக்கும் கூட்டணியில் தேமுதிக இருக்காது என்பதே அதன் மறைமுக குறியீடாம்.
News January 30, 2026
விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார்? பாஜக

ஊழல் காங்கிரஸோடு இணைவதற்கு அழுத்தம் கொடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார் என பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மலேசியாவில் விஜய் ரகசியமாக சந்தித்த திரை மறைவு லண்டன் தொழிலதிபரா, விஜய்யின் அப்பா சந்திரசேகரா என்று குறிப்பிட்டுள்ள அவர், தவெக ஆதவ்வின் கொள்கை ஆசான் திருமாவளவன் என்றால், தவெக தொண்டர்களுக்கு யார் கொள்கை ஆசான் என்றும் கேட்டுள்ளார்.
News January 30, 2026
அட முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா!

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்கும் *கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவும் *எலும்புகளை வலுப்படுத்தும் *காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மையை சரிசெய்யும் *உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.


