News January 5, 2026
EPS-க்கு அருகதை இருக்கா? சிவசங்கர்

திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என கூறும் அதிமுக, எப்போதோ அடிமை கம்பெனியாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். 55,000 லேப்டாப்களை வழங்காமல் வீணடித்த EPS-க்கு, திமுக அரசின் லேப்டாப் திட்டத்தை பற்றி பேச அருகதை இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு திட்டங்கள் தன்னால் தான் நடந்தது எனக்கூறி வரும் EPS, ‘நானே எல்லாம் செய்பவன்’ என்ற கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து வருவதாகவும் விமர்சித்தார்.
Similar News
News January 28, 2026
‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. வந்தாச்சு முக்கிய அப்டேட்

ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்திருந்தது. இந்நிலையில், தனி நீதிபதி அமர்வில் வழக்கை வாபஸ் பெற படத்தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும்போது தான் வாபஸ் பெற முடியும் என்பதால், அதற்குப் பிறகு சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழுவிற்கு செல்ல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 28, 2026
பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

<<18985799>>காரைக்கால்<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரவி பிரகாஷ் அறிவித்துள்ளார். மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேநேரத்தில், 10, +2 மாணவர்களுக்கு நாளை செய்முறை தேர்வு இருந்தால், அதில் மாற்றம் இருக்காது. அதனால், செய்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். SHARE IT.
News January 28, 2026
விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியம்

விலங்குகள் கடித்தால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீரிப்பிள்ளை கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 3 மாதம் கழித்து உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பூனை, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்துவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


