News November 18, 2025
EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News November 18, 2025
டாப் சிக்கன் உணவுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம்

சிக்கனை வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவதில் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அப்படி இருக்கையில், உலகின் டாப் 20 சிக்கன் உணவுகளின் பட்டியலில் நம்ம இல்லாம எப்படி இருப்போம். இதில் இந்தியாவின் 2 சிக்கன் உணவுகள் இடம்பெற்றுள்ளது. இதில் 5-வது இடத்தில் MS தோனி உட்பட பலரின் பேவரைட் டிஸ்தான் உள்ளது. அது என்னனு தெரிஞ்சுக்க மேலே உள்ள போட்டோஸ் SWIPE செய்து பாருங்க

வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே 25,000 வாக்குகள்: RJD

பிஹார் தேர்தலின் முடிவு கள நிலவரத்துக்கு ஏற்றார் போல இல்லை என RJD-ன் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 25,000 வாக்குகள் இருந்ததாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் மீறி தாங்கள் 25 இடங்களை வெல்ல முடிந்ததாகவும், NDA கூட்டணி அரசியலமைப்பை ஏமாற்றுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.