News February 17, 2026
EPS-ஐ சந்தித்த MLA அருள்.. NDA-வுக்கு ராமதாஸ் ஆதரவா?

ராமதாஸ் தரப்பு MLA அருள், சட்டப்பேரவை வளாகத்தில் EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால், பாமக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக உள்ளனர். அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் முடிவை இதுவரை அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், அருளை அனுப்பிவைத்ததன் மூலம் NDA-வில் இணைய ராமதாஸ் இசைவு தெரிவித்துள்ளாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
Similar News
News February 17, 2026
AI உச்சி மாநாட்டில் UPI வசதி இல்லையா?

<<19162885>>AI உச்சி மாநாட்டில்<<>> UPI வசதி இல்லாதது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த உணவு கடைகளில் UPI ஏற்கப்படாமல், பணம் மட்டுமே வாங்கப்பட்டதால் பெரும் சிரமத்தை சந்தித்ததாக பங்கேற்பாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், டிஜிட்டல் இந்தியாவை முன்னிறுத்தும் நிகழ்ச்சியில் UPI வசதி இல்லாததற்கு நெட்டிசன்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
News February 17, 2026
13 வயது சிறுவனால் அம்மாவான 15 வயது சிறுமி

தலைப்பை பார்த்ததும் தலைசுற்றுகிறதா? 2009-ல் நிகழ்ந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. UK-ல் 13 வயது சிறுவன் ஆல்ஃபி பாட்டன் மூலம் அவரது 15 வயது காதலிக்கு குழந்தை பிறந்ததாக செய்திகள் பரவின. இதனால், பாட்டன் ஓவர்நைட்டில் பிரபலமானான். ஆனால், 3 மாதங்களுக்கு பிறகு நடந்த DNA பரிசோதனையில் அந்த குழந்தைக்கு ஆல்ஃபி அப்பா இல்லை; 15 வயதான மற்றொரு சிறுவனே அப்பா என தெரியவந்தது. இதை படித்ததும் என்ன தோணுது?
News February 17, 2026
Ola CEO-வை கைது செய்ய உத்தரவு!

OLA நிறுவனத்தின் CEO பவிஷ் அகர்வாலை கைது செய்ய, கோவா நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. புகார்தாரர் முழு பணத்தையும் (₹1.47 லட்சம்) செலுத்தி வாங்கிய OLA EV வண்டி சிறிது காலத்திலேயே பழுதாகியுள்ளது. இதனால், அவர் வண்டியை ஷோரூமில் ரிப்பேருக்கு கொடுத்த நிலையில், அந்த வண்டி எங்கு போனது என்ற இல்லையாம். ஷோரூம் அதிகாரிகளும் பொறுப்பாக பதிலளிக்காததால், அவர் CEO மீது புகாரளித்துள்ளார்.


