News November 23, 2024
EPS உடன் கருத்து வேறுபாடா? எஸ்.பி.வேலுமணி பதில்

சமீபகாலமாக, EPSக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு விளக்கமளித்து எஸ்.பி.வேலுமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கும் EPSக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மகனின் திருமண அழைப்பிதழை வழங்கவே நயினார் நாகேந்திரனை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
ஸ்கிப்பிங் செய்யும் முன்….

உடலை உறுதியாக்கி சுறுசுறுப்பாக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் முன்: *10 நிமிடமாவது வார்மிங் பயிற்சிகள் செய்யவும் *ஷாக் அப்சர்பிங் ஷூக்கள் அணிவது நல்லது *சமதள தரையில் செய்ய வேண்டும் *ஸ்கிப்பிங் செய்ய மண் தரை சிறந்தது *தொடங்கும் போது உடலில் இருந்து உங்கள் கைகள் 45 டிகிரி கோணத்தில் தள்ளி இருக்க வேண்டும் *குதிக்கும் போது முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும், வளைந்திருந்தால் முதுகுவலி ஏற்படும்.
News August 16, 2025
MGR ஆக முடியாது.. விஜய்யை விளாசிய செல்லூர் ராஜு

ரசிகர்களை வைத்து தேர்தலில் வெற்றி கணக்கு போடுவது தவறானது எனவும் எல்லோரும் MGR ஆக முடியாது என்றும் விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஜனவரியில் தான் யார் யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியும் என்றார். மேலும், தேர்தலுக்கு 10 நாள்கள் இருக்கும்போது கூட்ட கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என சூசகமாக கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்தாண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. அக்.18(சனி), அக்.19(ஞாயிறு) என 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு <