News January 19, 2026
EPSக்கு அன்று ஏமாற்று வித்தை.. இன்று: மனோ தங்கராஜ்

அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மனோ தங்கராஜ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறியதற்கு, அதனை ஏமாற்று வித்தை என்று கூறிவிட்டு, நீங்கள் எதற்காக அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
Similar News
News January 30, 2026
தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
ஊழியர்களுக்கான வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை

சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் பணிநிரந்தரம் செய்யக்கோரி பலதரப்பும் போராட்டம் நடத்துவது பேஷனாகிவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்த திமுக, இப்போது கொச்சைப்படுத்துவதாகவும் சாடியுளளார்.
News January 30, 2026
அரசு திரைப்பட விருதுகள்… கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்

2016 – 2022 ஆண்டுகளுக்கான ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என்ற கேள்வியை SM-ல் மக்களிடம் இயக்குநர் பா. ரஞ்சித் எழுப்பியுள்ளார். திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் விருதுகளில் பாரபட்சம் உள்ளதாக பரவலாக கூறப்படும் நிலையில் உங்கள் கருத்து என்ன?


